#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓரினசேர்கையாளர்களை புறக்கணிக்காதீர்கள் - ஐரோப்பிய பெற்றோர்கள் போப் பிரான்சிஸ் அட்வைஸ்..!
ஐரோப்பியாவில் உள்ள வாடிகன் நகரில், போப் பிரான்சிஸ் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில் குழந்தைகள் வளர்ப்பு விஷயங்களில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவலைப்பற்றி பேசினார். மேலும், பிள்ளைகள் ஓரினசேர்கையாளராக இருந்தால் அவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய போப் பிரான்சிஸ், "பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் வெவ்வேறு பாலியல் விருப்பங்களை காண, பெற்றோர்களை அதனை கையாள்வது சிக்கலானது. இருப்பினும், மறைக்கும் மனபக்குவதுடன் செயல்பட கூடாது. ஓரினசேர்கையாளர்களை குடும்பங்களின் தங்களின் குழந்தையாகவும், உடன் பிறந்த சகோதரியாகவும் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
ஓரினசேர்க்கை திருமணத்தை கிருத்துவ திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என்றபோதிலும், சுகாதார பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் ஓரின சேர்க்கையளர்களுக்கு சிவில் யூனியன் வழங்கும் உரிமை சட்டத்தை ஆதரிக்க இயலும்" என்று தெரிவித்தார்.