கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
பிரதமர் மோடியால் புதினை சமாதானப்படுத்தி; உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்... அமெரிக்கா நம்பிக்கை..!
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், பிரதமர் மோடி அதிபர் புதினை சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 353-வது நாளை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்கிரேனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் பல மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கை வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, உக்ரைன் - ரஷியா இடையேயான போரை இந்திய பிரதமர் மோடி நிறுத்துவதற்கான நேரம் தாண்டிவிட்டதா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர், ரஷிய அதிபர் புதின் இந்த போரை நிறுத்த இன்னும் நேரம் இருக்கிறது. அதிபர் புதினை பிரதமர் மோடி, சமாதானப்படுத்த இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
மேலும் இந்த போரை நிறுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை பிரதமர் மோடியிடமே விட்டுவிடுகிறேன். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என்று கூறினார்.