மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக நாடுகளுக்கே செக் வைத்த ரஷியா.. ஒரேயொரு தரமான பதிலடியால் பதறும் மேற்கு நாடுகள்..!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்றதால், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் பலவும் ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க, ரஷியாவும் தரமான பதிலடியை வழங்கி வருகிறது. ரஷியாவின் எரிபொருளை வாங்கி வந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளும் பொருளாதார தடை விதித்ததால், அவற்றுக்கும் பல ஆப்புகளை ரஷியா வைத்துள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்துள்ள எச்சரிக்கையில், "ரஷியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிளை கொண்டு மட்டுமே இனி எரிவாயு வாங்க வேண்டும். ரூபிள் மூலம் எரிவாயு வாங்கவில்லை என்றால், அந்நாட்டுடன் கொண்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் வாயிலாக ரஷிய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்பட்டு, இவற்றின் மூலமாக வெளிநாட்டு பணம் ரூபிளாக மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக விளாடிமிர் புதின் தெரிவிக்கையில், "ரஷியாவிற்கு இலவசமாக யாரும் எதனையும் தரவில்லை. எங்கள் வளம் அது. நாங்கள் தொண்டு செய்யவும் தயாராக இல்லை. எங்களின் சாராம்சத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தார்.