மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் "நிர்வாணமாக ஊர்வலம் போவேன்" - கணவனுக்கு மனைவி பகிரங்க மிரட்டல்.!
கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாத பெண்மணி, விவாகரத்து கொடுக்கவிலை என்றால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன் என மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபிய நாட்டில் கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. மேலும், ஒரு மணிநேரத்திற்கு 7 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கணவருடன் வாழப்பிடிக்காத பெண்மணி ஒருவர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில், கணவருக்கு மனைவியை விட்டு பிரிந்து செல்ல விரும்பவில்லை. இதனால் அவர் விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் நீதிமன்றத்திற்கு பலமுறை அலைந்து திரிந்து நொந்துபோன பெண்மணி, "கணவராகிய நீ விவாகரத்து தரவில்லை என்றால், சாலையில் நிர்வாணமாக நடந்து செல்வேன். எனக்கு விவாகரத்து கொடு" என்று மிரட்டி இருக்கிறார்.
மனைவியின் பகிரங்க எச்சரிக்கையால் செய்வதறியாது திகைத்துள்ள கணவர், நீதிமன்ற உதவியை நாடி இருப்பதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.