திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி.! இன்னும் சில நாட்களில் நிறுத்தப்படும் G PAY .!? என்ன காரணம் தெரியுமா.!?
Google pay செயலி
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் இருந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, பல வகையான முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்கிறது. இதில் குறிப்பாக Google pay எனப்படும் செயலியின் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக பணம் அனுப்பலாம். இந்த செயலியின் சேவை இந்தியா உட்பட பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தடை செய்யப்படும் GPAY செயலி
2022 ஆம் வருடம் முதன்முதலில் google wallet சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் gpay பயனர்கள் நாடு முழுவதும் அதிகமாக தொடங்கினார்கள். பண பரிவர்த்தனைக்காக பல்வேறு செயலிகள் இருந்து வந்தாலும் ஜிபேயின் மூலம் பயன் பெறும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஆனால் பணபரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் Gpay சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்; உயிர்கொடுத்த மருத்துவர்கள்.!
இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. Google நிறுவனமே இந்த செய்தியை அறிவித்துள்ளதால் பயனர்கள் பதட்டம் அடைந்து வருகின்றனர். ஆனால் இந்திய பயனர்கள் இதனால் பதட்டமடைய தேவை இல்லை. 2024 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் அமெரிக்காவில் google pay சேவை நிறுத்தப்பட உள்ளது.
2024 ஆம் வருடம் ஜூன் மாதம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மட்டுமே கூகுள் பே சேவை செயல்படும் என்றும், மற்ற நாடுகளில் இந்த சேவை தடை செய்யப்படவுள்ளது என்றும் கூறியுள்ளனர். இதன் காரணமாக கூறப்படுவது, google தனது அனைத்து வாடிக்கையாளர்களையும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும், google வாலெட் செயலியை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் இதை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சிங்கப்பூரை தவிர 180 நாடுகளில் Gpay சேவை நிறுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம்; விடுதலை கேட்டு மக்கள் போர்க்கொடி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!