மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரவாதிகளுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்ட அரசு... வெறியாட்டம் நடத்திய தீவிரவாதிகள்.. 30 பேர் பலி.!
அல்-கொய்தா பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதற்குள் தாக்குதல் நடந்து அப்பாவி பொதுமக்கள் பலியான சோகம் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டின் சோமாலியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியாவின் தலைநகர் மொகைதீஷாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்சர் பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்த பலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.