தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இதை செய்தால் நீங்கதான் பொறுப்பற்ற சுயநலவாதி! கொரோனா பீதி! கிரிக்கெட் வீரர் வெளியிட்ட வீடியோ!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸால் உலகெங்கும் இதுவரைக்கும் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2.25000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பீதியில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசை சரிசெய்வதற்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும், கைகளைக் கழுவி தூய்மையாக இருப்பதற்கும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திசரா பெரேரா மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போதும் நீங்கள் வெளியே சென்று கொண்டிருந்தால், நீங்கள் பொறுப்பற்றவர் மற்றும் சுயநலவாதி. தயவுசெய்து பொது இடங்களில் இருந்து விலகியே இருங்கள். மற்றவர்களுடன் இடைவெளி விட்டு நின்று பேசுங்கள். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். உங்கள் முகத்தை தொடாதீர்கள். மிக முக்கியமாக பீதிடையாமல் இருங்கள் என தெரிவித்துள்ளார்.
If you’re still going out to public places then you’re being irresponsible and selfish.
— Thisara perera (@PereraThisara) March 20, 2020
Plz stay away from public places Keep a reasonable distance from others . wash your hands — a lot. And, don’t touch your face. You shouldn’t panic — just prepare. pic.twitter.com/QfllqwCQgv