திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலகமே அதிர்ச்சி.. ஆபத்தான நிலையில் சூடான் நாடு.. பிரதமர் திடீர் பதவி ராஜினாமா.!
சூடான் நாடு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது, அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என சூடான் நாட்டின் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சூடானில், 30 வருடமாக அதிபராக இருந்து வந்த ஓமர் அல்-பஷீர், கடந்த 2019 ஆம் வருடம் ஆட்சியில் இருந்து இராணுவத்தால் கற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இராணுவம் மற்றும் அரசியல் தலைவரை பிரதிநிதியாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டு இடைக்கால அரசு உருவானது.
இடைக்கால பிரதமராக அப்தல்லா ஹம்டோக் (Abdalla Hamdok) பொறுப்பேற்ற நிலையில், கடந்த 2021 அக். 25 ஆம் தேதி சூடானின் இராணுவம் இடைக்கால அரசினை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. இடைக்கால அதிபரான அப்தல்லா ஹம்டோக் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவசர நிலையும் அந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.
இராணுவம், அரசியல் தலைவர்களின் பிரதிநிதி குழு மற்றும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்த சூடான் இராணுவம் ஒப்புக்கொண்டது.
இதனால் அந்நாட்டின் அரசியல் குழப்பம் தீர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், சூடான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த அப்தல்லா ஹம்டோக் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அப்தல்லா ஹம்டோக், தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், இதன் வாயிலாக மற்றொரு நபர் தேசத்தை வழிநடத்தி செல்ல வாய்ப்புகள் வழங்க முடியும் என்றும், அரசியல் சக்திகளுக்கு இடையேயான சச்சரவை தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும், நாடு ஆபத்தான திருப்புமுனையை கடக்கிறது. அவை அவசரமாக சரி செய்யப்படவேண்டும் என்றும் கூறினார்.