உச்சகட்ட பயங்கரம்.. இருதரப்பு மோதலில் 168 பேர் படுகொலை., 98 பேர் படுகாயம்.. சூடானில் பழங்குடிகள் மோதல்.!
வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானில், கடந்த 2003 ஆம் வருடம் முதல் டர்பர் மாகாணத்தை மையப்படுத்தி உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. கிளர்ச்சியாளர்கள் அந்நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி தாக்குதல் நடத்துகின்றனர்.
மேலும், அங்குல ஜெனீனா நகரில் வசிக்கும் பழங்குடியில் 2 பிரிவினருக்கு இடையே அவ்வப்போது கடுமையான மோதல் நடைபெறும். தனிநபர் பிரச்சனை 2 தரப்பு பிரச்சனையாக மாறி, கலவரத்தில் மக்கள் கொன்று குவிக்கப்படுவார்கள்.
அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தொடங்கி இன்று வரை ஏற்பட்ட மோதலில் 168 பேர் இருதரப்பிலும் பலியாகியுள்ளனர். 98 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு உயர்மட்ட குழு அதிகாரிகளை நிகழ்விடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.