மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் ஆண் துணையின்றி தனியாக பயணிக்க கூடாது - தலிபான்கள் பரபரப்பு உத்தரவு.!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள்வசம் அதிகாரம் சென்றுள்ளதால், அங்கு தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து கடுமையான சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தலிபான்களின் செயல்பாட்டுக்கு உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ள தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பெண்ணொருவர் 72 கி.மீ தொலைவுக்கு அதிகமாக பயணம் செய்கையில், பெண்ணுக்கு நெருங்கிய ஆண் உறவினரின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.