53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#BigBreaking: அங்கன்வாடி மையத்தில் துப்பாக்கிசூடு.. பச்சிளம் பிஞ்சுகள் உட்பட 31 பேர் பரிதாப பலி.!
துப்பாக்கியுடன் அங்கன்வாடிக்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள வடகிழக்கு மாகாணம் (நொங் பூவா லம்பு) Nong Bua Lamphu. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 31 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 31 பேரில் குழந்தைகள், பெரியவர்களும் இருக்கின்றனர் என அந்நாட்டு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிசூடு குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி கூடுதல் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்த நிலையில், மீண்டும் அதனைப்போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதல் யாரால்? எதற்காக? நடத்தப்பட்டது என்ற விசாரணை நடந்து வருகிறது.