மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஷியாவிடம் எங்கள் நாட்டின் சில பகுதிகளை ஒப்படைத்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது.! உக்ரைன் ஜனாதிபதி மனைவி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீரமிக்க தலைவராக பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். உக்ரைன் ஜனாதிபதி எடுக்கும் தீர்க்கமான முடிவுக்கு அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அந்தவகையில் ரஷ்ய படையெடுப்பை அந்தநாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதல் குடிமகனாக எதிர்த்து நிற்க, அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா நம்பிக்கையை பரப்பும் மனிதாபிமான செயல்களை ஒளிபரப்பும் பணிகளில் முதல் பெண்மணியாக போர்க்களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தநிலையில், ரஷியாவிற்கு நாட்டின் சில பகுதிகளை விட்டுக்கொடுப்பது "சுதந்திரம்" மற்றும் அதிபர் விளாடிமிர் புதினின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வராது என்று உக்ரேனிய முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் சில சமயங்களில் நாடுகளின் தலைவர்களிடமிருந்து, சில சந்தர்ப்பங்களில் பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்களிடமிருந்து கேட்கும் அனைத்து அறிக்கைகளையும் உக்ரேனியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டின் சில பகுதிகளை மட்டும் விட்டு கொடுக்க முடியாது, இது ஒரு சுதந்திரத்தை விட்டு கொடுப்பது போன்றது. டான்பாஸ் பகுதியில் ரஷியா இப்போது அதன் தாக்குதலை தொடங்கி உள்ளது. எங்கள் நாட்டடின் பகுதிகளை நாங்கள் கொடுத்தாலும் ஆக்கிரமிப்பாளர் போரை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து அழுத்துவார்கள் அவர்கள் தொடர்ந்து எங்கள் நாட்டிற்கு எதிராக மேலும் மேலும் தாக்குதல்களை நடத்துவர் என கூறினார்.