ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
8 பேரில் 1 நபர் உடல் எடை காரணமாக பாதிப்பு; உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
உலகளவில் எட்டில் ஒருவர் உடல் பருமன் மற்றும் அது சார்ந்த பிரச்சனை காரணமாக அவதிப்படுவதாக உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இவ்வாறானவர்கள் உடல் பருமன் மட்டுமல்லாது நீரழிவு நோய், இதய பிரச்சனை, புற்றுநோய் உட்பட பிற விஷயங்களுக்கும் ஆளாகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பெரியவர்களிடம் உடல் பருமன் சார்ந்த விஷயம் என்பது இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது. 5 வயதுடைய குழந்தைகள் முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர் வரை உடல் பருமன் விஷயம் 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி பெரியவர்களில் 43 % பேர் அதிக எடையுடன் இருக்கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளின் சார்பில் உடல் எடை குறைக்கும் பங்களிப்பில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் செயலாளர் கூறினார்.