#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண்ணின் பெட் ரூமுக்குள் இருந்த சாக்கடை மூடி..! ஒருநாள் திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..
பெட்ரூமில் இருந்த சாக்கடை மூடிய திறந்த பெண் பெரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெனிபர் லிட்டில். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வரும் இவர் 1951ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய வீடு ஒன்றை சமீபத்தில் விலைக்கு வாங்கி, அதில் குடியேறியுள்ளார். அந்த வீட்டில் வசிக்க தொடங்கிய அவர், தனது படுக்கையறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதைப் பார்த்துள்ளார்.
முதலில் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அது உள்ளே என்ன இருக்கு என்று தெரிந்துகொள்ள அவருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்து, அந்த சாக்கடை மூடியை அவர் திறந்துள்ளார்.
அப்போதுதான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இத்தனை நாட்களாக அது சாக்கடை என நினைத்திருந்தநிலையில், அது சாக்கடை இல்லை. ஒரு பதுங்கு குழி என்பது தெரியவந்தது. மேலும் அந்த குழி உள்ளே சென்று பார்த்தபோது அதனுள்ளே இருவர் தங்குவதற்கு வசதியாக படுக்கையறையும், சிறுநீர் கழிக்க வசதியாகச் சிறிது இடமும், மற்றும் உடல் எடையைக் குறைக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் அதனுள் இருந்துள்ளது.
இதனை பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தநிலையில், இது என்னவாக இருக்கும் என விசாரித்தபோது, அந்த காலகட்டத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள மக்கள் அணுக்குண்டு தாக்குதல் நடந்தால் அதிலிருந்து தப்புவதற்காகத் தங்கள் வீடுகளில் இதுபோன்ற பதுங்குகுழிகளை ஏற்படுத்தியிருந்தனர் என்பது அவருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, பலரும் அந்த பதுங்கு குழியை சுத்தம் செய்து, நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.