4 மாதம் தாய்ப்பால் கொடுத்து தந்தையின் உயிர்காத்த மகள்; ரூ.200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம்; வரலாறு இதோ.! 



young-girl-breastfeeding-an-old-man-in-a-prison-cell-ar

 

உலகளவில் பல அரியவகை வரைபடங்கள் மற்றும் ஓவியங்கள் அதிக தொகைகள் கொடுத்து வாங்கப்படும். அவை கலைநயமாக இருப்பதாலும், அதற்கு கிடைக்கும் வரவேற்பினாலும், தனித்துவத்தாலும் அவை வரவேற்கப்படும். இந்நிலையில், ஒரு பெண் ஒருவர் சிறையில் இருக்கும் நபருக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் 30 மில்லியன் யூரோவுக்கு (200.90 கோடி) விற்பனை ஆகியுள்ளது.

ஏழ்மைக்கு திருடி மரண தண்டனை

பிரான்சில் 14ம் மன்னர் லூயிஸ் ஆட்சிக்காலத்தில், ஏழை நபர் ஒருவர் ரொட்டியை திருடிய குற்ற வழக்குக்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் சாகும் வரை பட்டினி கிடந்து இறக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட நபரை, அவரின் இளம் மகள் தனது கைக்குழந்தையுடன் தினமும் வந்து பார்த்து சென்றுள்ளார். 

இதையும் படிங்க: அடேங்கப்பா.. நாய்கள் பயணம் செய்ய தனித்துவ விமான சேவை; ஒரு டிக்கெட்டின் விலை இத்தனை இலட்சமா?.! 

உயிரைக்காத்த மகள்

தந்தையின் பசியை போக்க மகளும் வேறு வழியின்றி தனது தாய்ப்பாலை கொடுத்து இருக்கிறார். இந்த செயல் கிட்டத்தட்ட 4 மாதங்களாய் தொடர, பட்டினி சாவு தீர்ப்பு வழங்கி சிறையில் அடைக்கப்பட்ட நபர் எப்படி சாகவில்லை என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு நடத்தியபோது, கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்மணி, அவரின் தந்தைக்கும் பால் கொடுத்து உயிரை காப்பாற்றியது உறுதியானது. 

இந்த தகவல் நீதிமன்றம் வரை சென்றிடவே, நீதிபதி குறித்த நபரின் நிலை மற்றும் அவரது மகளின் தியாகத்தை போற்றி அவரை விடுதலை செய்தார். இந்த சம்பவத்தின் உண்மையை உணர்த்தும் பொருட்டு வரையப்பட்ட ஓவியம் வரலாற்று மிக்க தகவலை கொண்டுள்ள காரணத்தால், அது 2 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தேன் கூட்டில் நடந்த டிஸ்கோ டான்ஸ்; வியக்கவைக்கும் அதிர்ச்சி உண்மை.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.!