மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ரூ.45 ஆயிரத்தை நெருங்குகிறது இன்றைய தங்கத்தின் விலை.. இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு.!
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்தது.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, உலகளாவிய பொருளாதார பிரச்சனை போன்ற காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 40 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை, இன்றளவில் ரூ.45 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலை சென்னையில் 22 கேரட் ரூ.520 உயர்ந்து சவரனுக்கு ரூ.44,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.5,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,967 க்கும், சவரனுக்கு ரூ.47,736 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.