சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்; புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட்டால் ஷாக்.!

திருமணத்துக்கு முன்பு காதல் வயப்பட்ட நபருடன், திருமணத்துக்கு பின்னும் உறவை தொடர்ந்த மனைவிக்கு கணவர் முன்னின்று திருமணம் செய்து வைத்தார். ஆனால், புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட் குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்த்கபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பப்லு. இவரின் மனைவி ராதிகா. தம்பதிகளுக்கு கடந்த 2017 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்துக்கு முன்னதாகவே வேறொரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இருந்த ராதிகா, கட்டாயத்தின் பேரில் பப்லுவை திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: திருமணமான 15 நாட்களில் கணவர் கொடூர கொலை; கள்ளக்காதல் உறவுக்கு ஆசைப்பட்டு 22 வயது மனைவி அதிர்ச்சி செயல்.!
முதல் காதல்
திருமணத்துக்கு பின்னரும் தான் காதல் வயப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர், பப்லு வேலை விஷயமாக வெளியே சென்று வரும் சமயத்தை தங்களுக்கு சாதகமாக்கி சந்தித்து வந்துள்ளது. இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரியவரவே, பப்லுவிடம் கூறி இருக்கின்றனர். கணவர் கண்டித்தபோது, முதல் காதலை மறக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
மனைவிக்கு திருமணம்
இதனால் மனைவியின் நிலைமையை புரிந்துகொண்டவர், வேறு வழியின்றி மனைவியின் காதலனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளார். பப்லுவின் முடிவுக்கு முதலில் குடும்பத்தினர், ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின் பப்லுவின் உறுதியான முடிவு காரணமாக எதுவும் சொல்லவில்லை. புதிய வாழ்க்கைக்கு அந்த காதல் ஜோடியும் தயாராகி இருந்தது.
வழியனுப்பி வைத்தார்
பின் சட்டப்படி நீதிமன்றத்தில் மனைவியிடம் விவாகரத்து பெற்ற பப்லு, ராதிகாவுக்கு கோவிலில் வைத்து அவரின் காதலருடன் திருமணம் செய்து அளித்தார். எளிய முறையில் இவர்களின் திருணம் நடந்து முடிந்தது. தனது 2 குழந்தைகளையும் பப்லு தானே வளர்த்துக்கொள்வதாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளாக பப்லுவுடன் வாழ்ந்து வந்த ராதிகா, புதிய கணவருடன் வீட்டுக்கு சென்றார்.
மாமியார் வீட்டில் ட்விஸ்ட்
அப்போது, ராதிகாவின் புதிய மாமியார், முதல் கணவரின் இரண்டு குழந்தைகளின் நிலையை எண்ணி வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு தான் அன்பு தேவை என கூறி, ராதிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து அனுப்பி வைத்தார். இதனால் ராதிகா செய்வதறியாது பப்லுவின் வீட்டுக்கே திரும்பிவிட, அவரை பப்லுவும் ஏற்றுக்கொண்டதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: 30 நாட்களில் திருமணம்.. 20 வயது இளம்பெண்ணின் மர்ம மரணம்.. கைகள் கட்டப்பட்டு மரத்தில் தொங்கிய சடலம்.!