சேலம்: ஆன்லைன் விளையாட்டில் லட்சங்களை இழந்த எல்ஐசி முகவர் விபரீதம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!



in Salem a Man Dies by Suicide 

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கருப்பூர், அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மகன் ஹரிஹரன் (29). எல்.ஐ.சி முகவராக செயல்பட்டு வரும் ஹரிஹரன், கடந்த 2 ஆண்டுகளாகவே ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். 

ஆன்லைன் கேம்

இதற்காக பல இலட்சங்களை இழந்தவர், ஒருகட்டத்தில் வங்கிகள் மற்றும் தெரிந்த நண்பர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அந்த பணத்தையும் ஆன்லைனில் விளையாடி இழந்துள்ளார். 

இதையும் படிங்க: ஆசிரியர் கார் ஏற்றிக்கொலை? பதறவைக்கும் சம்பவம்.. சேலத்தில் அதிர்ச்சி.!

கடன் நெருக்கடி

கடன் கொடுத்த நபர்கள் அனைவரும் ஹரி கிருஷ்ணனுக்கு நெருக்கடியை தரவே, மனமுடைந்த ஹரி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

காவல்துறை விசாரணை

தகவல் அறிந்து வந்த கருப்பூர் காவல்துறையினர், ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: #Watch: பட்டப்பகலில் கொல்லப்பட்ட ரௌடி; விபத்து என நினைத்து வீடியோ எடுத்து கண்ணீர்விட்ட பெண்.!