சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
திருப்பூர்: பப்பாளி சாறு நிறுவனத்தில் நேர்ந்த சோகம்; 2 வடமாநில தொழிலாளர்கள் பலி.!

பழச்சாறின் கழிவுகள் தேங்கும் தொட்டியில் தவறி விழுந்து இருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, அந்தியூர் பஞ்சாயத்து, சடையகவுண்டன்புதூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பப்பாளி சாறுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பிட் வச்சிருக்கியா? சோதிப்பது போல பாலியல் தொல்லை... தேர்வெழுதி கண்ணீருடன் வந்த மாணவிகள்.. திருப்பூரில் பயங்கரம்.!
பணியில் இருந்தனர்
இந்நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் ஹில் (வயது 24), அருண் கோமங்கோ (வயது 30) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இருவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தவறி விழுந்து உயிரிழப்பு
அச்சமயம், ஜூஸ் தயாரிப்பில் வீணாகும் கழிவுநீர் தொட்டியில், ரோகித் ஹில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த அருணும் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
திறந்த வெளி நிலையில் இருந்த தொட்டிக்குள் விழுந்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விஷயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தொழிலாளர்களின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரிழந்தும் பலரின் உடலில் வாழும் கல்லூரி மாணவர்; உடல் உறுப்பு தானம்.!