மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு; இன்று சவரனுக்கு ரூ.44,640 க்கு விற்பனை.!
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, உக்ரைன் போர் உட்பட பல காரணத்தால் தங்கத்தின் விலை என்பது இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலையானது சமீபமாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த வாரம் முதல் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை படிப்படியாக 44 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5,550 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 640 க்கு விற்பனை செய்யப்படுகிறது.