மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Gold Silver Price: ஒரேநாளில் உச்சக்கட்டம்.. சவரன் தங்கத்தின் விலை ரூ.59,000/- மட்டுமே.. ஆடிப்போன நகைப்பிரியர்கள்.!
உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது. இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தது.
நகை வாங்க நினைத்தோர் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். இதனிடையே, மக்களவையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி குறைத்து அறிவிக்கப்பட்டாலும், உலகளவில் நிலவும் பதற்ற சூழலால் தங்கத்தின் விலை என்பது உச்சமாக இருக்கிறது.
சவரன் தங்கம் ரூ.59 ஆயிரம்
இந்நிலையில், சென்னையில் அபரண தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து, கிராம் ரூ.7375 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து, ரூ.59,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விண்ணைமுட்டும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மற்றும் நகை வாங்க நினைப்போரிடையே கடும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,06,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழாக்காலம் காரணமாக தற்காலிகமாக விலை அதிகம் உயர்ந்து வருவதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.