#BigBreaking: மத்திய பட்ஜெட் எதிரொலி... உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.. கடும் சோகத்தில் மக்கள்.!



Today Gold Silver Price

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து, தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

ரஷியா - உக்ரைன் போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் இருந்து, தங்கம் - வெள்ளியின் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. கொரோனா காலகட்டத்திலும் தங்கத்தின் விலை அப்படியே இருந்தது.

இந்நிலையில், சென்னையில் விற்பனை செய்யப்படும் சவரன் தங்கத்தின் விலை நேற்றில் இருந்து ரூ.480 உயர்ந்து, சவரன் ரூ.43,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.5,475 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

India

அதேபோல், சென்னையில் ஒருகிலோ வெளியின் விலையானது ரூ.1,300 உயர்ந்து ரூ.77,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தை வாங்க நினைத்தவர்கள் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, வைரம், சிகிரெட் ஆகியவற்றின் மீதான சுங்கவரி உயர்த்தகப்படுகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில், அவை அமலாவதற்கு முன்பே தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.