மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய சிக்கலில் தக் லைஃப் திரைப்படம்.!! அடுத்தடுத்து விலகிய 2 முன்னணி ஹீரோக்கள்.!! பரபரப்பு பின்னணி.!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்தத் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. இந்தத் திரைப்படத்தின் அறிமுக வீடியோவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக இருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி மற்றும் மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் துல்கர் சல்மான் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலையும் முன்னிட்டு கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு சென்றதால் துல்கர் சல்மானால் கால் சீட்டை தள்ளி போட முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் தக் லைஃப் திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி தக் லைஃப் திரைப்படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகியதாக சொல்லப்பட்டாலும் சிம்பு விற்கும் அவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையே அவர் இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த்சாமி தக் லைஃப் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.