மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
24 வயதில் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சை.. நலமுடன் இருப்பதாக இன்ஸ்டாவில் அறிவிப்பு.!
உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சிவாங்கி ஜோஷி, ஹிந்தி திரைஉலகின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு 24 வயது ஆகிறது.
இந்த நிலையில், நடிகையின் இன்ஸ்டாகிராம் பதிவில், "அனைவருக்கும் வணக்கம், கடந்த சில நாட்களாக, எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. ஆனால், எனது குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கடவுளின் அருளால் நான் நலமாக இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் கவனித்துக்கொள்வதையும், மிக முக்கியமாக உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாகும். அனைவரையும் நேசிக்கிறேன். மேலும், நான் விரைவில் மீண்டும் செயல்படுவேன்" என தெரிவித்துள்ளார்.