தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??
அடடே... மாசம் ரூ. 1,000 போதும்... 5 வருடத்தில் ரூ. 3,00,000.!! அசத்தலான சேமிப்பு திட்டம்.!!

சேமிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இளமை காலத்தில் நமது வருமானத்தை சேமித்து வைத்தால் அது நமது சந்ததிகளுக்கு பயன்படுவதோடு நம் வயது முதிர்ந்த நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக பெரும்பாலானவர்கள் வங்கிகளில் பணத்தை சேமித்தாலும் தபால் துறையும் நமது பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த துறையாகும். இவற்றில் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் நமது பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வட்டித் தொகையும் முதிர்வு காலத்தில் கிடைக்கும்.
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம்
மத்திய அரசின் தபால் துறையால் நடத்தப்படும் தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் முதிர்வு காலத்தின் இறுதியில் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். தங்களது வருமானத்தை நீண்ட நாட்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு டிடிஎஸ் பிடிக்கப்படுவதில்லை.
மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சம் 9 லட்சம் முதலீடு செய்யலாம். மேலும் கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்தத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்துவதன் மூலமும் சேர்ந்து பயன்பெறலாம். நமது சேமிப்பு பணத்திற்கு மத்திய தபால் துறை 7.4% வட்டியும் வழங்குகிறது.
முதிர்வு தொகை விவரங்கள்
இந்தத் திட்டத்தில் 9 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடங்களில் முடிவில் 3,33,000 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு வட்டியாக 5,550 ரூபாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு 1 வருடத்திற்குள் கணக்கை மூடினால் உங்களது பணம் திரும்ப கிடைக்காது. 1 வருடத்திற்கு பிறகு 3 வருடத்திற்குள் கணக்கை மூடினால் செலுத்திய தொகையிலிருந்து 2% அபராதமாக பிடிக்கப்படும்.