மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்களின் உள்ளாடைக்கு பெண் மாடல்.?! முன்னணி நடிகையின் விளம்பர வீடியோ!
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையைச் சார்ந்த மாடல் அழகி ஆவார். 2006ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா யூனிவர்சாக பட்டம் வென்றவர். பின்னர் இந்தியா வந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர் 2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அலாதீன் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த வருகிறார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் ஆண்களுக்கான உள்ளாடைகளை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனத்தில் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டார். இதுபோன்று ஒரு ஆண்களின் பிரத்தியேகமான உள்ளாடைகளுக்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த விளம்பரத்தின் காணொளியை தனது இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகளை உடைக்கும் இந்த விளம்பரத்தில் தானும் ஒரு பகுதியாக இருப்பதை மிகவும் உற்சாகமாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். மேலும் இந்த விளம்பரத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டேக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
சாம்பல் நிற ஷார்ட்ஸுடன் பிரவுன் கார்டிகன் அணிந்து துள்ளலாக அந்த விளம்பரத்தில் வரும் ஜாக்குலின் சந்தேகமின்றி இந்த பிராண்டுக்கு பொருத்தமான தேர்வு அவர்தான் என ரசிகர்கள் ஏக்க பெருமூச்சுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர் நீங்கள் ஆண்களின் உள்ளாடைகளை விற்க விரும்பினால், ஜாக்குலினை விட சிறந்த மற்றும் விரும்பத்தக்க தேர்வு இருக்க முடியாது என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.