#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவங்கெல்லாம் கிடையாது.. லிங்குசாமி தெலுங்கு படத்தின் வில்லன் இந்த தமிழ் நடிகர்தான்! ஒருவழியாக போட்டுடைத்த படக்குழு!!
தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கு சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
அதாவது லிங்குசாமி ராம் பொத்தினேனியை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இதில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க உள்ளார்.
ஆக்ஷன் படமான இதில் கெத்தான வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அதில் முதலில் மாதவன் நடிக்கவுள்ளதாகவும், பின்னர் ஆர்யா நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக தமிழில் மிருகம், ஈரம், மரகத நாணயம், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட படங்களில் நடித்த
ஆதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.