#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு அஜித் வருகிறாரா...? அதற்கு நடிகர் ஆதி என்ன கூறியுள்ளார் பாருங்க...
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் நடித்த முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா மற்றும் ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரும் மே 18ம் தேதி நிக்கி கல்ராணி மற்றும் ஆதி திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதால் நடிகர் ஆதி அஜித்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து உள்ளார். சமீபத்தில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் மீடியாவை சந்தித்து ஆதி மற்றும் நிக்கி கல்ராணி பேசியுள்ளனர். அப்போது அஜித் திருமணத்திற்கு வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆதி, "அழைப்பிதழ் கொடுத்திருக்கிறோம், அவர் வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை" என கூறி இருக்கிறார்.