பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோன விஜய்சேதுபதி பட நடிகை.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. இவர் தமிழில் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு வெளியான '18 வயசு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்தார்.
இப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதில் கதாநாயகியாக இடம் பிடித்தார்.
இப்படத்திற்குப் பின்பு சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், புரியாத புதிர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ' விக்ரம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
இது போன்ற நிலையில், தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் நடிகை காயத்ரி. இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி காயத்ரியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நடிப்பதற்காக இந்த அளவிற்கு இறங்கி இருக்கிறாரே என்று ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.