கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்ன்னா? இதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.! - நடிகர் ஆதி.!
உலகநாயகன் கமலஹாசனே அந்த பிரபல நடிகரின் நடிப்பை பார்த்து வியந்து போனார்.. யார் அந்த நடிகர் தெரியுமா.?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மூலமே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். மேலும் தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார் கமலஹாசன்.
இவரது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து 'உலகநாயகன்' எனும் பெயர் பெற்றிருக்கிறார். சிறுவயதிலிருந்தே நடித்து வரும் கமலஹாசன் அன்றிலிருந்து இன்று வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். இன்றும் இவரது நடிப்பிற்கென்று ரசிகர்கள் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில், 'தேவர் மகன்' திரைப்படத்தில் மாயாண்டி தேவர் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார். இப்படத்தில் நாசரின் நடிப்பு திறமையை பார்த்து கமலஹாசன் ஆச்சரியப்பட்டார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.