அஜித் குமாரை நேரில் சந்தித்த கர்நாடக திரைப்பட விநியோகிஸ்தர்: அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!



ACTOR aJITH kUMAR MET wITH MURTHY REDDY 

 

தமிழ் திரையுலகில் அல்டிமேட் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் தல அஜித் குமார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. 

அதனைத்தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் விடா முயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரை, கர்நாடக மாநிலத்தின் மூத்த திரைப்பட விநியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ரெட்டி நேரில் சந்தித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், "மிகப்பெரிய இந்திய நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருடன் நான். பண்புள்ளம் கொண்டவர், சிறந்த மனிதர்" என தெரிவித்துள்ளார்.