96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல நடிகர் விபத்தில் காலமானார்!. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் இன்று காலை மரணமடைந்தார்.
நடிகர் ஹரிகிருஷ்ணா ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கார் விபத்தில் சிக்கி இவர் சாலையில் கிடந்த வீடியோ காட்சி வெளியாகி சினிமாத்துறைக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி-யான இவருக்கு பல பிரபலங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நலங்கொண்டா அருகே நடந்த கார் விபத்தில்தான் ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் மரணமடைந்தார். அவர் விபத்துக்குள்ளான இடத்துக்கு அருகிலேயே ஹரிகிருஷ்ணாவும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.