மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நகைச்சுவை நடிகரின் 2 கிட்னியும் செயலிழப்பு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி : உதவி கேட்டு கண்ணீர் வீடியோ.!
பிரபலமான நகைச்சுவை நடிகர் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்து அகதியாக தமிழகம் வந்து சினிமா துறையில் தவிர்க்க இயலாத காமெடி நடிகராக மாறியவர் போண்டாமணி. இவரின் இயற்பெயர் காதீஸ்வரன் ஆகும். அதிமுகவின் தொண்டராக இருக்கும் போண்டாமணி, தற்போது வரை 270 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் வெளியிட்டுள்ள வீடியோவில், "அன்பு அண்ணன் நடிகர் போண்டாமணி அவர்களுக்கு 2 கிட்னி செயலிழந்துவிட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த கநோயாளி பார்க்கும் நண்பர்கள் யாரேனும் மேல் சிகிச்சைக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்கள். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்து தஞ்சம் புகுந்து பல போராட்டத்திற்கு மத்தியில் சினிமாவில் நுழைந்து திருமணம் செய்து 2 குழந்தைகளை ஆளாக்கி கொண்டு இருக்கிறார். நண்பர்களே அவரை காப்பாற்றுங்கள். உங்களால் முடிந்த உதவியை யாரிடமாவது சொல்லி செய்ய வையுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு கிட்னியும் செயலிழந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று...
Posted by Tamilnadu Press & Media Reporters Union on Tuesday, 20 September 2022