மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் ரொம்ப நன்றிகடன்பட்டிருக்கேன்.! பிரபல தயாரிப்பாளருக்கு மனமுருகி நன்றி கூறிய நடிகர் போண்டாமணி.! ஏன் தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் போண்டாமணி. இவர் கடந்த ஆண்டு தனது சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அப்பொழுது அவருக்கு விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதியுதவி செய்தனர்.
மேலும் தற்போதும் இரு கிட்னியும் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய நடிகர் போண்டாமணியின் மகள் சாய்குமாரி 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் போண்டாமணியின் மகளின் மேற்படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பிசிஏ படிப்பதற்காக சீட்டும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் போண்டாமணி, என் மகளின் பிளஸ் டூ ரிசல்ட் அறிந்தவுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவரது வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் எனது மகளுக்கு பிசிஏ படிப்பதற்காக சீட் கொடுத்துள்ளார். இப்படியொரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக பேசி நன்றி கூறியுள்ளார்.