மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. எவ்வளவு எளிமை! இளநரையோடு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரின் மகள்! ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம்!!
தற்போதைய காலகட்டங்களில் திருமணங்கள் என்பது மறக்க முடியாத சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்க வேண்டுமென பலரும் விரும்புகின்றனர். மேலும் அதனால் திருமண நிகழ்ச்சிகளில் பலவிதமான புதுமையான முயற்சிகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மனமக்களும் தாங்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அசத்தலாக பிரத்யேகமாக மேக்கப் போட்டுக் கொள்வர்.
ஆனால் பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகள் நியாதி தனது இளநரையை கூட மறைக்காமல் மிகவும் எளிமையாக, பாரம்பரிய முறைப்படி யாஷோவர்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி பார்ப்போருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபல நடிகரின் மகளாக இருந்தும் அவரது எளிமையை, யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் திலீப் ஜோஷி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்! எங்களுக்கு ஆதரவாக இருந்து எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதியினருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.