மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. கியூட் Couple.. காதலியை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பிரபல நடிகர்..! வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயராம். இவர் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம்.
இவர் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். இந்த நிலையில், இவர் தனது காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் மாடல் அழகி மற்றும் லிவா மிஸ் திவா 2021 ரன்னர்-அப் தாரிணி காலிங்கராயருடன் புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், முதன் முதலாக தன் காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை கண்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்பொழுது திருமணம்? என்று கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.