ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ஆஹா.. எவ்ளோ கியூட்.. கமலிடம் மேடையிலேயே ஐ லவ் யூ கூறிய குஷ்பூ..! இது எப்போன்னு தெரியுமா?.. வைரலாகும் வீடியோ..!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத மாபெரும் அடையாளத்துக்கு சொந்தக்காரர் கமலஹாசன். இவர் இந்திய அளவிலும், உலக அளவிலும் விருதுகள் வாங்கிகுவித்த நாயகன், திரையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாகவும் விளங்கி வருகிறார்.
சிவாஜிக்கு பின்னர் அவரைப்போன்ற ஒரு கலைஞன் என்ற பெயர் பெற்றது கமல்ஹாசன் மட்டுமே. இவர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மூலமாக தற்போது மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்திருந்த நிலையில், இந்தியன் 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
வரும் 7-ஆம் தேதி இவரது பிறந்த நாள் கொண்டாட உள்ள நிலையில், பலரும் தற்போதிலிருந்தே அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு விஜய் டிவி அதனை சிறப்பித்தது. அத்துடன் ஞாயிறு நவம்பர் 6-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதன் ப்ரோமா குறித்த வீடியோ தற்போது வெளியாகிய நிலையில், அதில் நடிகை குஷ்பூ கமலுக்கு தனது அன்புடன் கொண்ட காதலை பகிர்ந்து கொண்டு வெளிப்படுத்தி இருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்தும் கூறியுள்ளார்.