மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டில் நேர்ந்த பெரும் துயரம்.! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீருடன் இரங்கல்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தமிழில் விஜய்,அஜித் போல தெலுங்கில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி. அவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திராதேவி அவர்களது உடல் காலை 9 மணி முதல் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்கு மறுதினம் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்திராதேவி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.