திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப்பாக நடித்தவர் இந்த பிரபலம் தானா..! வைரலாகும் புகைப்படங்கள்
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் எந்திரன். இந்த படத்தில் வசீகரன், சிட்டி என இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார்.
பொதுவாக இரட்டை வேடங்களில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் இடம்பெறும் போது டூப்பான ஒரு நடிகரை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். அவ்வாறு எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப்பாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் நடித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மனோஜ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் பேன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற மனோஜ் தற்போது தனது தந்தை பாரதிராஜாவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
— manoj k bharathi (@manojkumarb_76) April 10, 2020