நடிகர் நகுல் வீட்டில் விசேஷம்மாம் ! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!



actor-nakkhul-5-wedding-photo

நடிகர் நகுல் ஸ்ருதி 5 வது கல்யாண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். நடிகர் நகுல் நடிகை தேவையானியின் தம்பி ஆவார்.

அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார் நகுல்.

 இவர் தனது நெருங்கிய தோழியும் காதலியும் ஆன ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இக்குழந்தைக்கு அகிரான என பெயர் வைத்துள்ளனர்.

சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் இன்று 5 வது கல்யாண நாளை  சந்தோசமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.