மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே.. மகேஷ் பாபுவின் அண்ணன் இப்படிபட்டவரா??.. 3 திருமணம் போதலையா?.. 50 வயதில் 30 வயது நடிகையுடன்.... நீங்களே பாருங்களேன்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு. இவரும் தெலுங்கு, ஹிந்தி உட்பட பலமொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அளித்தா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை முதலாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிகளுக்கு நவீன், விஜயா கிருஷ்ணா என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருந்த நிலையில், திடீரென விவாகரத்தில் முடிந்தது.
இதன் பின்னர் ரேகா சுப்ரியாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். இவரையும் விவாகரத்து செய்த நரேஷ் பாபு தனது 50 வயதில் ரம்யா ரகுபதி என்ற பெண்ணை மூன்றாவதுதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நரேஷ் பாபு விட 20 வயது குறைவு.
ரம்யாவிற்கும், நரேஷ் பாபுவிற்கும் மகன் இருக்கும் நிலையில், இவரையும் விவாகரத்து செய்த அவர் கன்னட நடிகையான பவித்ரா லோகேஷை காதலிப்பதாக கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வசித்ததாக கூறப்படும் நிலையில், விரைவில் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், "பவித்ரா ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர். அதற்காக அவர் எதையும் செய்வார். அவர் சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்திலும் அப்படியே நடக்கிறது.
அவரது 1200 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க திருமண நாடகம் நடத்தப்பட்டு இருக்கலாம். பணத்திற்காக என்னை விவாகரத்து செய்தார். இந்த விஷயம் என்னுடன் நரேஷுக்கு இன்னமும் புரியவில்லை. இந்த நாடகத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது