கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நடிகர் நாசரின் உடல்நிலை கவலைக்கிடமா?.. நாசரின் மனைவி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என்ற பன்முக திறமைகளை கொண்டவர் நாசர். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பின் போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது.
இதனால் நாசருக்கு என்னாயிற்று? எப்படி இருக்கிறார்? உயிருக்கு ஏதும் ஆபத்தா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்து நாசரின் மனைவி கமிலா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "எனது கணவர் மிகவும் நன்றாக உள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு பாசி படர்ந்த பாறையில் கால்தவறி கீழே விழுந்ததால், சிறிய சிராப்புகள் ஏற்பட்டது. இதனாலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் சின்ன சிராய்ப்புகள் என்பதால் டி.டி ஊசி மட்டும் போட்டுவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
இதற்கிடையே அவர் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டார் என்ற வதந்திகள் பரவியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர் மிகவும் நன்றாக உள்ளார். இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். எனவே எனது கணவர் குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறியுள்ளார்.