96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரமாண்டமாக நடைபெற்ற பார்த்திபன் மகள் திருமணம்! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பார்த்திபன். நடிப்பையும் தாண்டி இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. இவரது இயக்கத்தில் வெளி வந்த படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. நடிப்பு, சினிமா, இயக்கம் இதையும் தாண்டி இவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்யும் நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீத்தா தம்பதியினரின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது மூத்த மகள் அபிநயாவுக்கு சென்னையில் உள்ள லீலா மகாலில் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரனும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் நரேஷ் கார்த்திக் என்பவரைதான் அபிநயா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு திரையுலகை சேந்த பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து கூறினர்.