மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா?? SK 20 படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்! யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!
தமிழ் சினிமாவில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து மக்களிடையே பிரபலமானவர் சிவகார்த்திகேயன். பின்னர் ஹீரோவாக களமிறங்கிய அவர் தனது முயற்சியால், கடின உழைப்பால் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் SK20 படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.