#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் நேரில் சந்திப்பு; படப்பிடிப்பு தலத்தில் நெகிழ்ச்சி.!
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், கிஷோர், ரக்சன் உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன்.
இப்படம் ரூ.160 கோடி செலவில் தயாராகி வருகிறது. அக். மாதம் 2024 L வெளியிட முழு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனிரூத் படத்திற்கு இசையமைக்கிறார்.
The Titans of Indian Cinema! 🌟 Superstar @rajinikanth and Shahenshah @SrBachchan grace the sets of Vettaiyan in Mumbai, with their unmatched charisma. 🤩🎬#Vettaiyan 🕶️ pic.twitter.com/MDkQGutAkb
— Lyca Productions (@LycaProductions) May 3, 2024
படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஆந்திரா, ஹைதராபாத் என பல நகரங்களில் நடைபெற்று வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது.
இந்நிலையில், மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகளில் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.