பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடக்கடவுளே.. ரோபோ சங்கருக்கு இப்படி ஒரு நோயா?.. உடல் எடை குறைந்ததற்கு இதுதான் காரணமா?..! கதறும் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல காமெடி ஷோக்களின் மூலமாக மக்களிடையே பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். இவர் அடுத்தடுத்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்திவந்தார்.
சமீபத்தில் வெளிநாட்டு கிளிகளை அனுமதியின்றி வளர்த்து வந்ததாக லட்சக்கணக்கில் இவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பெரிய அளவில் திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அப்படியே இருக்கிறது.
இந்த நிலையில் அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு? ஏதேனும் பிரச்சனையா என்று கதறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து விசாரிக்கையில், அவருக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பழைய நிலைக்கு திரும்பும் முயற்சியில் உடல்நிலையை தயார் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
நன்றி : way2news