#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்; மூக்கில் அறுவை சிகிச்சை.. ரசிகர்கள் பிரார்த்தனை..!!
File pic
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடிகர் ஷாருக்கானின் திரைப்படம் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது, ஷாருக்கானுக்கு விபத்தில் காயம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதற்கட்ட தகவலின் படி நடிகர் ஷாருக்கான் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நிலையில், அவரது மூக்கு பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், இதனால் மூக்கிலிருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் அவசரகதியில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மூக்கில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் குழு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படக்குழு இதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.