மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈஸ்வரன் படப்பிடிப்பின் கடைசி நாள்! நடிகர் சிம்பு கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்! செம ஹேப்பியில் படக்குழு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் பாரதிராஜா, மனோஜ், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை பெருமளவில் குறைத்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில் படத்தின் கடைசி நாளின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு, ஈஸ்வரன் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்கம், வேட்டி, சேலை, இனிப்புகள் பரிசளித்துள்ளார். மேலும் துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கியுள்ளார். இதனால் படக்குழுவினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.