"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
செக்கசிவந்த வானம் திரைபடத்தில் நடிகர் சூர்யா! கசிந்ததா ரகசியம்? அதிர்ச்சியில் படக்குழு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஜோதிகா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். படத்தின் பட பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரம் வெளியாகி இதுவரை 5மில்லியன் பார்வைய்ளர்களை கடந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த புகைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில் சிங்கம் சூர்யா இருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறாரா? அல்லது ஏதவது சிறு வேடங்களில் நடிக்கிறாரா என ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை தனது மனைவி ஜோதிகாவின் நடிப்பை பார்ப்பதற்கு கூட சூரியா ஷூட்டிங் ஸ்பாட் வந்துருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் தகல்வல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்ட்டத்தக்கது.