மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை! உச்சகட்ட மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா?
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய்யின் பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தெரி, மெர்சல் படங்களை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பிகில் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில், நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன்ற ஜாம்பாவன்களின் மெழுகு சிகைகள் உள்ள நிலையில் அதே அருங்காட்சியகத்தில் விஜய்க்கு மெழுகு சில வைக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Celebration Time for #Thalapathy fans! 🥁🎉🎈🌈#ThalapathyVijay's New Wax Statue placed at Kanyakumari Museum 😎😍🔥👌@actorvijay @Jagadishbliss @v4umedia_ @BussyAnand pic.twitter.com/lqqRCVueZn
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 22, 2019